மீண்டும் இம்சை அரசனாக வடிவேலு! கதை இதுதானாம்
வைகை புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் கொடுத்த படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடிக்க படம் வெற்றிநடை போட்டது.
இயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படம் தற்போது மீண்டும் 24ம் புலிகேசியாக எடுக்கப்படுகிறது. இதில் 23ம் புலிகேசியின் இரு மகன்கள் தான் ஹீரோவாம்.
அதில் ஒருவர் சாதுவாக இருக்க மற்றொருவர் மிக காமெடி செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்ததில் கதாபாத்திரங்கள் ஏற்கனவே இருப்பது போல தெரிந்தாலும் கதை புதுமையாக இருந்தால் சரிதான்.