இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போருக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதி வரையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

