மாவீரர், போராளிகளின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நிதி சேர்ப்பு, விருந்துபசார நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நேற்று 12-11-2017 பிரித்தானியா ஒக்ஸ்போட்டில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“கார்த்திகை 27 இலக்கு 100” எனும் கருப்பொருளில் 100 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் குறித்த நிதி சேகரிக்கப்படுவதாகவும், அதனடிப்படையில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா ரூபா 80 ஆயிரம் பெறுமதியான பசுமாடுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நா.க.த அரசின் ஊடகப் பிரிவுச் செயற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா தெரிவித்தார்.
100இற்கும் மேலான புலம்பெயர் தமிழ் மக்கள் தமது பங்களிப்பை வழங்கியதுடன் அங்கு நடைபெற்ற விருநதுபசாரத்திலும் கலந்து சிறப்புத்தனர்.

