மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் முகமாக மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணி பரவலாக இடம்பெற்றுவருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஆரம்பமானது.
இப்பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மாவீரர்களின் பெற்றோர்களால் குறித்த சிpரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இம்முறை மாவீரர் நாளை எழுச்சியுடன் கொண்டாடுவதற்கான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு(07.11.2017) ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திலேயே ஒரு கலந்துரையாடலை நடத்துவதென இக்குழு தீர்மானித்துள்ளது.இக்கலந்துரையாடலில் மாவீரர்களின் பெற்றோர்கள் வர்த்தக சங்கத்தினர் நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லக் குழு சார்பாக கோரிக்கை விடுக்கப்படுகின்றது.