Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாறாத உறுதியுடன் நிற்பதே தீர்விற்கான வழியாகும்: அனந்தி சசிதரன்

November 13, 2017
in News, Politics
0

எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். எனவே இவ்விடயத்தில் மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராடிவரும் அவர்களது உறவுகளைச் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். இனிமேலும் அழுது புலம்பி பயனில்லை. எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நாம் எமது கோரிக்கையில் உறுதியாக நிற்பது அவசியம். அதன் மூலமே அனைத்துப்பிரச்சினைக்கும் உரிய நீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இறந்து விட்டார்கள் என்றால் அதனால் மனதில் ஏற்படும் துக்கம் காலப்போக்கில் ஆறிவிடும். ஆனால் இருக்கிறார்களோ இல்லையோ என்பது கூடத் தெரியாது நாம் படும் துயரம் கறையான் அரித்தது போன்று பெரும் மனவேதனையை தந்துகொண்டிருக்கின்றது. இந்தப்பிரச்சினையால் நானும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் உங்கள் வலிகளையும் வேதனைகளையும் என்னால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

எமது கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சர்வதேசம் மற்றும் அரச தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சமரசங்களை ஏற்காது நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதன் மூலமே எமது பிரச்சினைகள் குறித்து பேசியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளோம். இல்லையென்றால் எமது விடயம் எப்போதோ கைகழுவி விடப்பட்டிருக்கும்.

என்னைச்சந்திக்கும் சர்வதேச பிரதிநிதிகளிடம் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டியதன் கட்டாயத்தினை எடுத்துக்கூறுவதுடன் அவர்களுக்கான நீதி கிடைக்கும் வரை உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம் என்று அழுத்தம் திருத்தமாகவும் கூறிவருகின்றேன்.

எனது இந்த இறுக்கமான நிலை சமரசம் செய்யும் நோக்கில் வரும் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றமாக இருப்பதால் சிலர் என்னைச்சந்திப்பதை தவிர்க்கின்றார்கள்.

எமது கண்முன்னே இலங்கை இராணுவத்திடம் நாம் கையளித்து காணாமல் ஆக்கபட்ட, கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்தும் அறவழி நின்று போராடுவோம். அதன் மூலமே அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அமைச்சர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

காணிகளை இராணுவம் விடுவிக்காமைக்கு புதிய காரணம் கூறுகிறார் விஜயகலா

Next Post

ஆணுறைகளும் ,உயர்தர மாணவர்களும் ! – திடுக்குறவைத்த மட்டக்களப்பு சம்பவம் !

Next Post
ஆணுறைகளும் ,உயர்தர மாணவர்களும் ! – திடுக்குறவைத்த மட்டக்களப்பு சம்பவம் !

ஆணுறைகளும் ,உயர்தர மாணவர்களும் ! - திடுக்குறவைத்த மட்டக்களப்பு சம்பவம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures