மாட்டுக் கறி உண்பவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கக்கூடாது என இந்து மகாசபையின் தலைவர் கூறி உள்ளார்.
கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பினால் பலரும் நிவாரண நிதிகளை அந்த மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்து மகாசபை என்னும் இந்து அமைப்பின் தலைவர் சக்ரபாணி மஹாராஜ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர், “முதலில் கேரள மக்கள் மாட்டுக்கறி உண்கிறார்களா என்பதை கேட்டறிய வேண்டும். பசு மாடு என்பது அன்னை ஆகும். அந்த கோமாதாவை உண்பது பாபம் ஆகும். அவ்வாறு பாபம் செய்பவர்களுக்கு உதவுவது அதைவிட பாவம் ஆகும். அதனால் கேரள மக்களுக்கு உதவுவது தவறாகும்” என தெரிவித்துள்ளார்.