மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படியே நடாத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்பாக சிக்கல்கள் பல இருப்பதாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது. இதன்போது பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலப்பிட்டிய ரேவத்த தேசிய பாடசாலையின் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.