மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய அறிக்கை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்று இடம்பெறுவதுடன், இறுதியில் வாக்கெடுப்பும் நடாத்தப்படவுள்ளது. இதற்கு எதிராக வாக்களிக்க ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, இன்றையதினம் எல்லைநிர்ணய அறிக்கை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது விவாதத்தை நடத்திவிட்டு, பிறிதொரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்துவதா? என கட்சித் தலைவர்கள் இன்று(24) காலையிலேயே முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

