மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது.
புகையிரத சேவையை மீள ஆரம்பிக்கும் திகதியும், புகையிரத சேவையை தொடர்ந்து ஆரம்பிக்காமல் இருப்பதற்கான உரிய காரணமும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுமார் 2 மாத காலத்திற்கு பிறகு பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 120 புகையிரத பயணங்களை தினசரி சேவையில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில புகையிரத சேவையாளர்களை சேவைக்கு அழைக்க வேண்டாம் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதில் 21 ஆம் திகதி பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்கும் தீர்மானம் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத போக்குவரத்து சேவையை தொடர்ந்து முடக்கி வைப்பதற்கான உரிய காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கருத்திற் கொண்டு புகையிரத பயணங்களை அதிகரிக்கும் வகையில் புகையிரத திணைக்களம் புகையிரத பயண சேவை அட்டவணையை திருத்தியமைத்தது.
மாகாணங்களுக்குள் மாத்திரம் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்க கோரியுள்ளோம்.
புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளார்கள் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]