ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் இணைப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார, தயாசிறி ஜயசேகர உட்பட 6 பேர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

