Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கை – நிராகரித்து ஐ. நாவில் சாட்சியம்

March 15, 2019
in News, Politics, World
0

ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 40 ஆவது  கூட்டத்தொடர் கடந்த மாதம் 25.02.2019 ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இதனையொட்டி தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 70 இற்கும் மேற்பட்ட  மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக இக் கூட்டத்தொடரில்  செயற்பட்டு வருகின்றனர்.

அவ் வகையில் இன்றைய(13.03.19) கருத்தரங்கு  “புதிய உலக ஒழுங்கின் கீழ் இனவழிப்புகள்”
(Genocides under new order) எனும் தொனிப்பொருளில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் திரு   ஜீவா டானிங் அவர்களினால் மு.ப 10.30- 11.30 வரை தொகுத்து வழங்கப்பட்டது.

குறிப்பாக இக் கருத்தரங்கில் மன்னார் மனிதப் புதை குழியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த இந்தியத் தடயவியல் நிபுணர் முனைவர் SAVIOR SELVA SURESH அவர்களின் உரையானது மிகவும் காத்திரமாக அமைந்திருந்ததுடன், சிறீலங்காவின் தமிழினவழிப்பு பற்றிய தெளிவான பார்வையை பார்வையாளர்களிடம் உருவாக்கியது.

மேலும் அவர்; “மன்னார் மனிதப் புதைகுழிகளின் ஆய்வு அறிக்கையானது சர்வதேச விதிமுறைகளை பின்பற்றவில்லை” என்பதை  அங்கே அழுத்தமாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இக் கருத்தரங்கில்த மிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்
VIJAYAKUMAR NAVANEETHAN,  மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் SAKTHIVEL MADHAVAN ஆகியோர் கலந்து கொண்டு புதிய உலக ஒழுங்கிற்கேற்ப ஸ்ரீலங்கா அரசு எவ்வாறாக தமிழீழத்தில் திட்டமிட்ட கட்டமைப்புசார்  தமிழின அழிப்பை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றதென தெளிவாக எடுத்துரைத்தனர்.

இவர்களுடன் குர்திஸ்தான் மனித் உரிமைச் செயற்பாட்டாளர் HEMAN RAMZE MAHMOOD அவர்களும் கலந்துகொண்டு, அங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக விளக்கியிருந்தார்.

Previous Post

மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 285 வங்கதேசிகள் இந்தோனேசியாவில் மீட்பு!

Next Post

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…!

Next Post

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures