Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், 8000 இற்கு மேற்பட்ட மாற்றுதிறனாளிகள்

March 6, 2021
in News, Politics, World
0

இலங்கையிலே முதலாவது ஆடைக் கைத்தறிப் பூங்கா மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் 292 ஏக்கர் நிலப்பரப்பில் அரசாங்கத்தினல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2800 சதுரக்கிலோமீற்றர் நிலப்பரைப்பைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு தொழிற்சாலைகூட உருப்படியாக இல்லை.

ஜனாபதிதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைப் பிரகடனத்தின்கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கைத்தறி நெசவு உற்பத்தி கிராமம் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை(05) மாலை மட்டக்களப்பு எருவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

யுத்தத்திற்கு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர், யுத்தத்திலே பங்குபற்றியவர்கள், யுத்தத்தில் பங்கு கொண்டவர்களின் பிள்ளைகள் என 3 தலைமுறையாக எமது மக்கள் கடந்த காலத்தில் யுத்ததில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளார்கள். 8000 இற்கு மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் உள்ளார்கள். இந்நிலையில் பல்வேறு தேவைகளைக் கொண்டு நமது மாவட்டம் உள்ளது. மாறாக அர்ஜூன் அலோசியஸ் அவர்கள் 450 கோடி ரூபாவிலே எதனோல் தொழிற்சாலையைக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் எமது அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

800 மில்லியன் ரூபாவில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுள்ளன. 10000 மில்லியன் நிதி இலங்கையில் தொழில் நுட்ப பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அந்த தொழில் நுட்ப பூங்கா 2000 மில்லியன் சொலவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வரவுள்ளது. இந்த மாட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் சுயதொழில் முயற்சியாளர்க்ள உருவாக்கப்படல் வேண்டும். தொழிற்சாலைகள் கொண்டுவரப்படல் வேண்டும்.

கொவிட் – 19 அச்சம் இன்னும் நீடிக்குமானால் நாம் இன்னும் வெளிநாடுகளை நம்பியிராமல் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் உற்பத்திக் கிராமங்களை உருவாக்கி வருகின்றார். அவ்வாறு இல்லையேல் நாம் அனைத்திற்கும் வெளிநாட்டிலேதான் கையேந்தி நிற்கவேண்டி வரும்.

இலங்கை சுதந்திரமடைந்;த பின்னர் 49 சதவீதம் விவசாயத்தில் வருமானத்தை ஈட்டிய எமது நாட்டில் தற்போது 7.9 வீதம்தான் இலங்கையில் விவசாய உற்பத்தியாகவுள்ளது. ஆகவே அனைவரும் உற்பத்தியாளர்களாக மாற வேண்டும். நமது நாடு தன்னிறைவடைய வேண்டுமானால் ஒவ்வொரு கிராமங்களும், ஒவ்வொரு உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குத் தேவையானதை நாங்களே உற்பத்தி செய்ய வேண்டும். இந்நிலையிலும் மக்கள் மத்தியில் கடன் சுமையை சுமத்தக்கூடாது என்பதற்காக வங்கிகளில் வட்டி வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளது.

ஒரு கிராம சேவை பிரிவுக்காக அரசாங்கம் பல அரச உத்தியோகஸ்த்தர்களை நியமித்துள்ளார்கள். ஆனாலும் சில அரச உத்தியோகஸ்த்தர்கள் குட்டி ராஜாக்கள்போல் மக்கள் அர்வகளைச் சந்திக்க முடியாது, தொலைபேசியில் கதைக்க முடியாது, அரச நிதி திரும்பிச் செல்கின்றது, நன்றாக சேவை செய்கின்றனர்கள் மத்தியில், இவ்வாறு ஒரு சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனவே அரச உத்தியோகஸ்த்தர்கள் மக்களுக்கு விழிப்புணர்வில் ஈடுபடல் வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

Previous Post

அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூற வேண்டும் – ஆனந்தசங்கரி

Next Post

மின்சாரம் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை 100 சதவீதம் பூர்த்தி

Next Post

மின்சாரம் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை 100 சதவீதம் பூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures