நாடு பூராகவும் கொவிட் சூழ் நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000/= நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பாதிப்புக்குள்ளான 79,580 குடும்பங்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெற்றுவருகின்ற சுமார் 78,584 குடும்பங்களுக்கும், முதியோர் கொடுப்பனவை பெற்றுவருகின்ற 996 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 79,580 குடும்பங்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் குறித்த கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு குறித்த கொடுப்பனவானது பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலின் படி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.












