Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் அதிகபடியான மழைவீழ்ச்சியாக 142.4 மில்லி மீற்றர் பதிவு- அரசாங்க அதிபர்!!

January 5, 2021
in News, Politics, World
0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்கப் பெற்ற மழை வீழ்ச்சி 142.4 மில்லி மீற்றர் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
கடந்த 1, 2, 3 ஆம் திகதிகளில் பெய்த இடி மின்னலுடன் கூடிய அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கருத்து தெரிவித்த அரச அதிபர்,
மட்டக்களப்பு நகரில் 1 ஆம் திகதி 16.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் 2 ஆம் திகதி 17.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் அதிகளவான மழை வீழ்ச்சியாக 142.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மேலும்; நாவகிரி 68.1 மில்லி மீற்றர், தும்பன்கேணி 44.1 மில்லி மீற்றர், மைலம்பாவெளி 111.2 மில்லி மீற்றர், பாசிக்குடா 40 மில்லி மீற்றர், உன்னிச்சை 28.5 மில்லி மீற்றர், வாகனேரி 78.2 மில்லி மீற்றர், கட்டுமுறிவு 19 மில்லி மீற்றர், ரூகம் 36.3 மில்லி மீற்றர், மழைவீழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றதாகவும் இதனால் பல்வேறு பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார.
நீரேந்து பிரதேசங்களை அண்டிய மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினருக்கு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் கடந்த 1 ஆந்திகதி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் சில குடும்பம் இடம்பெயர்வு

Next Post

தேர்தலை நடத்தினால் அரசுக்குப் படுதோல்வி – புலனாய்வுப் பிரிவு

Next Post

தேர்தலை நடத்தினால் அரசுக்குப் படுதோல்வி - புலனாய்வுப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures