மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ள ‘மோகன்லால்’ என்கிற படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லாலின் தீவிர ரசிகையாக நடித்துள்ளார் மஞ்சு வாரியார்.. ஆனால் நிஜத்தில் மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா..?
மோகன்லால் மம்முட்டி ஆகியோரை பிடிக்கும் என வழக்கம்போல புத்திசாளித்தனாமன் பதிலால் எஸ்கேப் ஆகும் மஞ்சு வாரியர் சிறுவயது முதல் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுகின்ற நம்ம பிரபுதேவாவின் தீவிர ரசிகராம்..
பள்ளி கல்லூரி செல்கின்ற நாட்களில் பிரபுதேவா சம்பந்தப்பட்ட படங்களில் இருந்து விதம் விதமான புகைப்படங்களை வெட்டியெடுத்து ஆல்பம் உருவாக்கும் அளவுக்கு பிரபுதேவா வெறியையாக இருந்தாராம் மஞ்சு வாரியர்.