அரசாங்கத்துக்கு எதிரான பலமான ஒரு எதிர்க் கட்சியாக கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 எம்.பிக்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன மாத்திரம் கலந்துகொள்ளவில்லையெனவும் அவர் சுகயீனம் காரணமாகவே சமூகமளிக்க வில்லையெனவும் அக்குழுவின் உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.