உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான டாப் 100 பட்டியலில், கோஹ்லி 83வது இடத்தை பிடித்துள்ளார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆண்டு வருமானம் ரூ.161 கோடியாகும். அமெரிக்க பாக்சிங் நட்சத்திரம் ப்ளாயிட் மேவெதர் (41 வயது) ரூ.1,900 கோடி வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். பிரபல கால்பந்து வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகள் எவரும் டாப் 100ல் இல்லை.