Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம்

September 12, 2018
in News, Politics, World
0
பொலிசாரின் எல்லைமீறிய அராஜகமே கனகராயன்குள சம்பவத்திற்கு காரணம்

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்ததும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும்.

ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிசாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியதோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.

புனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்றைய சூழலில் பொலிசார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல.

இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிசாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை தமிழ் பேசும் சகோதரர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிசாரை இடைத்தரகர்களாக வைத்து நீததிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Previous Post

யாழில் பொலிஸ் வாகனம் கடத்தல்- நான்கு பேர் கைது

Next Post

வவுனியாவில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்…!!

Next Post
வவுனியாவில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்…!!

வவுனியாவில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures