பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரியவருகிறது.
ஜெனீவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளாலும் சிவில் சமூகப் பிரதிநிதிகளாலும் குறித்த போராட்டம் முன்னெடுப்பதாகத் தெரிவித்தும் தற்போதைய சமகால தொற்று நோய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் தடை உத்தரவு வழங்கவேண்டும் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் தடை உத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்திருக்கின்றார்.
இதனை அடுத்தே குறித்த தடை உத்தரவினை நீதிமன்றம் வழங்கியிருப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டவகையில்,
உற்சாகப்படுத்தும் வகையிலான நடவடிக்கையே குறித்த அறிவிப்பு என்றும் திட்டமிட்ட வகையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் கட்டளையை பெற்றுக்கொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

