Easy 24 News

பேஸ்புக்கில் ஆன் லைனில் இருந்து போதே தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்

பேஸ்புக்கில் ஆன் லைனில் இருந்து போதே தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்

அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் பேஸ்புக்கில் ஆன் லைனில் இருந்து கொண்டிருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ: பேஸ்புக் லைவ் வீடியோவில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்
வாஷிங்டன்:

அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை சேர்ந்த டி.ஜே.வில்லியம்ஸ் என்பவர் காரில் இருந்து கொண்டே பேஸ்புக் ஆன் லைன் வீடியோவில் பேசிக்கொண்டிருந்தார். அவரது இரண்டு நண்பர்கள் அந்த காரில் இருந்தனர். இருவரும் வில்லியம்ஸை பார்த்தவண்ணம், பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு அதிகமான அந்த வீடியோ பதிவில் சுமார் 5 நிமிடம் 40 நொடிகள் துப்பாக்கிச் சூடு சத்தம் மட்டும் பதிவாகியுள்ளது. 20 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் பதிவாகியுள்ளது.

“நிம்மதியாக இருங்கள், அமைதியாக இருங்கள், நிம்மதியாக இருங்கள், தூங்க செல்லாதீர்கள், நிம்மதியாக இருங்கள்” என்ற குரல் வீடியோ பதிவில் ஒலித்தது.

துப்பாக்கிச் சுடும் சத்தம் முடிந்த பிறகும் சுமார் ஒரு மணி நேரம் வீடியோ பதிவாகி இருந்தது.

துப்பாக்கிச் சூட்டினை நோர்போக் போலீஸ் துறை உறுதி செய்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதில் இருவருக்கு பலத்த காயமும், ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தில்லா காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்போக் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டனியோ பெர்கின்ஸ் என்பவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *