Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேரருளைப் பெற்றுத் தரும் சோமாஸ்கந்தர்

August 26, 2021
in News, ஆன்மீகம்
0
பேரருளைப் பெற்றுத் தரும் சோமாஸ்கந்தர்
காக்கும் கடவுளான திருமால், இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக, புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமயம், சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), கவுமாரம் (முருகன்), சவுரம் (சூரியன்), காணாபத்தியம் (விநாயகர்) என ஆறுபிரிவுகளைக் கொண்டது. இதில் சிவன், சக்தி, முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு. சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம், நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது. உண்மையாகிய சிவனும், அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்ற இன்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார். சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து, பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க, அதே ஆசனத்தில் வலது காலை மடக்கி, இடது காலை தொடங்கவிட்ட நிலையில் பார்வதி வீற்றிருக்கிறாள். அவளது இடது கையில் வரத முத்திரையும், வலது கையில் குவளை மலரும் தாங்கியுள்ளாள். இருவருக்கும் இடையில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் பார்வதியின் கழுத்தளவு உயரத்திற்கு நின்ற நிலையில் இருப்பார்.
இதைத்தவிர வேறு கோணங்களிலும் கூட சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம். காக்கும் கடவுளான திருமால், இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக, புராணங்கள் தெரிவிக்கின்றன.
அசுரர்களின் துன்பத்தில் இருந்து மீள்வதற்காக இந்திரன் திருமாலை வழிபட்டான். அவனுக்கு திருமால் சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினார். அதனை இந்திரலோகத்தில் வைத்து பூஜித்து வந்தான். அதன்பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு, அசுரர்களை வென்றான். இந்திரன் வைத்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தனக்குத் தரும்படி, முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார். அதற்கு இந்திரன், “இது விஷ்ணுவுடையது. அவர் சம்மதம் இல்லாமல் நான் தரமுடியாது” என்று கூறினான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி, திருமாலை வணங்கி அந்த சிலையை பெறுவதற்கான அனுமதியை பெற்றான். ஆனாலும் அந்தச் சிலையை கொடுக்க மனம் இல்லாத இந்திரன், தேவ சிற்பியைக் கொண்டு அதே போன்று 6 வடிவங்களைச் செய்தான். அதில் சரியான சிலையை முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்துவிட, மற்ற சிலைகளையும் அவனிடமே கொடுத்து, பூலோகத்தில் வைத்து பூஜிக்கும்படி இந்திரன் அறிவுறுத்தினான். திருமால், இந்திரன் இருவரும் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் நிறுவினார். மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார். சோமாஸ்கந்த மூர்த்தியே இத்தலங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார். இத்தலங்கள் `சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. http://Facebook page / easy 24 news
Previous Post

டோக்கியோ பராலிம்பிக்கில் நாளை களமிறங்கும் 3 இலங்கையர்கள்

Next Post

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ராணாவுக்கு சம்மன்

Next Post
போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ராணாவுக்கு சம்மன்

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ராணாவுக்கு சம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures