2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
பொங்கல் ரிலீஸ் என்பதால் படத்தின் புரொமோஷனை அதிகரிக்க தொடங்கி உள்ளது தயாரிப்பு நிறுவனம். திங்களன்று மரணமாஸ் என்கிற சிங்கிள் டிராக் பாடலை வௌியிட்டனர். இந்தப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது.
தொடர்ந்து படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்கள் பெயரை பர்ஸ்ட் லுக்காக வௌியிட்டு வருகின்றனர். அதன்படி, விஜய் சேதுபதி ஜித்து என்ற கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில், அடுத்தப்டியாக நவாசுதீன் சித்திக் போஸ்டரை வௌியிட்டுள்ளனர்.
இதில், அவர் சிங்கார் சிங் என்ற வேடத்தில் நடிக்கிறார். நவாசுதீன், நடுத்தர வயதை கடந்தவராக, கண்ணாடி அணிந்தபடி போஸ் கொடுக்க, பின்னணியில் ரஜினி நடந்து வருவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.