பெரு மற்றும் பிரேசில் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசிலையொட் டிய பெருவின் கிழக்கு பகுதியில் 609கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் வடக்கு சிலேவில் உள்ள அரிகா பகுதியிலும் நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்தது. இதுவரை நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

