அரசியல் உரிமைகைளை மதிக்காது, பெரும்பான்மையினர் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அமைச்சர், அதிகாரப் பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என பெரும்பான்மையினர் மத்தியிலும், பெரும்பான்மையினரால் தாம் ஏமாற்றப்படுவோம் என தமிழ் மக்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமாகும். அதேவேளை, அதிகாரப் பகிர்வினால் நாடு இரண்டாக பிளவுபடும் என யாராவது கூறினால் அது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.
வடக்கிலோ, தெற்கிலோ மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கு மீண்டும் இடமளிக்க முடியாது. எனவே, இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டில் வன்முறைக்கு வித்திட வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.