‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ படங்களின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணிக்கு வந்தவர் விஜய் தேவரகொண்டா. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த “நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
மீண்டும் தன்னுடைய பழைய வெற்றியைப் பெற அவர் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா என்ற பெயரை தேவரகொண்டா விஜய் சாய் என மாற்றி இருக்கிறாராம். இந்தப் பெயருடன் தான் அவர் தற்போது நடித்து வரும் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தேவரகொண்டா விஜய் சாய் என்பது தான் அவரின் நிஜப் பெயராம். அந்தப் பெயரிலேயே இனி தொடர்வது என விஜய் முடிவெடுத்துள்ளாராம். சினிமாவில் சென்டிமென்ட் என்பது எப்போது எப்படியெல்லாம் வரும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.