Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பெண் தாதாவாக நடிப்பது சவாலானது ; ராதிகா சரத்குமார்

March 8, 2019
in Cinema
0

சீரியலில் பிஸியாக இருக்கும் நடிகை ராதிகாவுக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையிலும், மலையாள சினிமா அவ்வப்போது கைகொடுத்து வருகிறது. கடந்த 2017 மலையாளத்தில் ராம்லீலா என்கிற சூப்பர் ஹிட் படத்தில் திலீப்பின் அம்மாவாக, ஒரு அரசியல்வாதியின் மனைவியாக, அரசியலுக்குள் நுழையும் பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா.

அதைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு குற்றப் பரம்பரையினரின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘தி கேம்பினோஸ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் ராதிகா. இந்த படத்தில் பெண் தாதாவாக கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ராதிகா. ஒரு பெண் தாதா மற்றும் அவரது நான்கு மகன்களை சுற்றி இந்த கதை நகர்கிறதாம்.

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பெண் தாதா கதாபாத்திரத்தில் நடிப்பது கொஞ்சம் சவாலானதாகவே இருந்தது என கூறியுள்ளார் ராதிகா. இவரது மகனாக வில்லன் நடிகர் சம்பத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இன்று இந்த படம் வெளியாகியுள்ளது

Previous Post

42 கோடிக்கு விலை போன சாஹோ சாட்டிலைட் ரைட்ஸ்

Next Post

சிவகார்த்திகேயன் படத்தை முடித்தார் பாலசரவணன்

Next Post

சிவகார்த்திகேயன் படத்தை முடித்தார் பாலசரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures