Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பெண்கள் கூட்டம் இல்லாதது ஏன் தெரியுமா?

December 29, 2017
in Cinema
0

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில் தற்போது அவர் நடத்தி வரும் ரசிகர் சந்திப்பு முக்கியத்தும் பெற்றிருக்கிறது.

கடந்த 26 முதல் நடைபெற்று வரும் இந்த சந்திப்பு 31ம் தேதி நிறைவு பெறுகிறது. அரசியல் பிரவேசம் குறித்து அன்று அறிவிப்பதாக ரஜினி ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதாவது அரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில் ரசிகைகள் கூட்டம் இல்லை. தினம் ஆயிரம் ரசிகர்கள் ரஜினியுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களில் ரசிகைகள் ஓரிருவர்தான். மற்றபடி ஆண் ரசிகர்களே நிறைந்திருக்கிறார்கள்.

இதைக் குறிப்பிட்ட பலரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் விசாரித்தோம்.

அவர்கள் தெரிவித்ததாவது:

“பொதுவாகவே நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் ஆண்கள்தான் தீவிரமாக ஈடுபடுவார்கள். நடிகரின் படம் வெளியாகும்போது போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைப்பது போன்றவற்றை ஆண்கள்தான் செய்வார்கள். மன்ற உறுப்பினர்களில் கூட 99 சதவிகதம் ஆண்கள்தான் இருப்பார்கள். இது எல்லா நடிகர் மன்றங்களுக்கும் பொதுவானது.

பெண்களைப் பொறுத்தவரை நடிகருக்கு ரசிகையாக இருந்தாலும் மன்ற உறுப்பினர்களாக சேர்வது அரிது” என்றார்கள்.

மேலும், “ரஜினியின் இந்த ரசிகர் சந்திப்பு மிகுந்த திட்டமிடலோடு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பாஸ்கள் அனுப்பப்பட்டு, அவற்றில் ரசிகரின் புகைப்படம் ஒட்டி மன்ற மேலிடத்தின் அனுமதி பெற்ற பிறகு அதை வைத்து கூட்டத்துக்கு வர முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகான சந்திப்பு என்பதால் இத்தனை வருடம் மன்றத்தில் தீவிரமாக செயல்பட்ட (ஆண்) ரசிகர்களே அதிகம் வருகிறார்கள்.

ஒரு பாஸூக்கு ஒருவர் மட்டுமே அனுமதி. அவருடன் மனைவியோ சகோதரியோ வர வேண்டும் என்றால் தனியாக பாஸ் வாங்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனாலும் சில மாவட்ட பொறுப்பளர்கள் சிலர் இரண்டு மூன்று பாஸ்களை வாங்கி மனைவி, சகோதரிகளை அழைத்து வந்தனர். இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. ஆகவேதான் பெண்கள் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது” என்று தெரிவித்தார்கள்.

Previous Post

14 ஆண்டுகளுக்குப் பின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

Next Post

அமெரிக்காவில் இந்து கோவிலாக மாற்றமடையும் கிறிஸ்தவ தேவாலயம்!

Next Post

அமெரிக்காவில் இந்து கோவிலாக மாற்றமடையும் கிறிஸ்தவ தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு | குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

July 25, 2026
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

July 25, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 25, 2026
செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

July 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures