பெண்களின் உள்ளாடைகளை களவாடும் நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீரகெட்டிய, கட்டுவான பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களின் உள்ளாடைகளை அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக களவாடி வருவதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உள்ளாடைகளை திருடிய நபர் இதற்கு முன்னதாகவும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் அவருக்கு எதிராக இதே குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுவான, கொடுவேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவரே இவ்வாறு பெண்களின் உள்ளாடைகளை திருடி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நபர் ஒர் ட்ரக்டர் சாரதி என பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் கட்டுவான, கிரிவான்கொட பகுதியில் அழகுக்கலை நிலையமொன்றை நடத்தி வரும் பெண் ஒருவரின் உள்ளாடைகளை இந்த நபர் களவாடும் காட்சிகள் சீ.சீ.ரீ.வி கமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகளின் ஊடாக குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும் இந்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.