புலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கையில் சொல்லப்பட்டது என்ன? வெளிவரும் உண்மைகள்!
2009ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி நகரை கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி படையெடுத்தனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அப்பொழுது போராளிகளுக்கு ஒரு சுட்டறிக்கையினை வழங்கியதாக பொது மக்கள் மத்தியில் இன்று வரை பேசப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொள்வதற்காக விடுதலைப் போராளிகள் தமது குடும்பங்களை அவர்கள் பாதுகாப்பாக கருதப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றீர்கள் என்று அவர் வெளியீட்ட சுட்டறிக்கையில் சுருக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான அறிவித்தலின் தகவல்கள் போராளிகளின் குடும்பங்கள் ஊடாக பொது மக்கள் மத்தியிலும் தெரியவந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் அவருடைய குடும்பத்தை பாதுகாப்பு கருதி யுத்த இடத்தை தவிர்த்து வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவரின் மூத்த மகன் சாள்ஸ்அன்ரனி சமர்க்களத்தில் இறந்துள்ளதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
பின்னர் இறுதி யுத்தம் முடிவடைந்து சில நாட்களில் அவரின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவரின் மனைவி மதிவதனியும் அவருடைய மகள் துவாரகாவும் எங்கே?.. அவர்களின் நிலை என்ன..? என்பது பற்றிய தகவல் எதுவும் இதுரை வெளிவரவில்லை என்னும் விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இன்றுவரை பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..