ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கொள்கை உடன்பாடு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட லக்ஷ்மன் பியதாஸ ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணியின் கொள்கைகள் தொடர்பாக கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் கட்சிகளின் கூட்டணிக் கொள்கைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படும். கடந்த கூட்டங்களின்போது காணப்பட்ட முரண்பாட்டு நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த கலந்துரையாடலின்போது, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட புதிய கூட்டணி தொடர்பான முதற்கட்ட இணக்கப்பாடுகளை அடைவதற்கும் எதிர்பார்க்கின்றோம்” என ரோஹன லக்ஷ்மன் பியதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.