Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை

January 2, 2021
in News, Politics, World
0

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் ஜனவரி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், இதற்கான புதிய வரையறைகளை நிர்ணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதற்காக நானூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல – இரா.சம்பந்தன்

Next Post

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அலுவலகம் திறப்பு

Next Post

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அலுவலகம் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures