பிரான்ஸ் தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைவர், மதுபோதையில் மகிழுந்து ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு அணியின் வீரரும், தலைவருமான Hugo Lloris, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலை கைது இலண்டன் மாநகரில் வைத்து கைதானார். இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இலண்டன் காவல்துறையினர், அதிகாலை 2.20 மணிக்கு Hugo Llorisஇன் மகிழுந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது மேற்கொண்ட சோதனையில், அவர் மதுபோதையில் மகிழுந்து செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நிபந்தனைகளின் பெயரின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி இலண்டன் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

