Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் இரத்தக்காயங்களுடன்

May 23, 2017
in News
0
பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் இரத்தக்காயங்களுடன்

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்நிகழ்ச்சியின் கடைசி பாடலை Ariana Grande-பாடும் போது, திடீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.

திடீரென்று வெடிசத்தம் கேட்டதால் பதறிய மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் ஓடியதால், அனைவரும் முட்டி மோதி ஓடியுள்ளனர்.

இதில் ஏராளமானோருக்கு இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பொதுமக்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதில் பலர் அழுது கொண்டே அந்த வீதியில் வந்ததும், ஒரு சிலர் இரத்தக்காயங்களுடன் அந்த வீதியில் நடக்க முடியாமல் நடந்து சென்றதும் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திடீரென்று நடந்த சம்பவத்தில் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல
advertisement

தெரசா மே தொடர்பான கருத்துக்கணிப்பு! வீழ்ச்சியடைந்த பவுண்ட்

Tags: Featured
Previous Post

இராணுவ டேங்கரில் வந்திறங்கிய டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன்

Next Post

எல்லா காலத்திலும் கனடாவின் உயரிய முத்திரை குறிகளாக இருப்பவை!

Next Post
எல்லா காலத்திலும் கனடாவின் உயரிய முத்திரை குறிகளாக இருப்பவை!

எல்லா காலத்திலும் கனடாவின் உயரிய முத்திரை குறிகளாக இருப்பவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures