விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்தது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது.
ரமணன் உள்ளிட்ட இவர்கள் காணாமல் போனதாகவே கருதப்படுகின்றனர்.
எனினும், இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.