உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (25) வியட்நாம் சென்றுள்ளார்.
எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் வியட்நாம் ஹனோய் நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் அங்கு சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் சாகல ரத்னாய உட்பட விசேட குழுவொன்று பிரதமரின் இவ்விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் பிரதமர் செயலக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

