ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தனது நோக்கங்களை கூற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் என வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிட்டு பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவர் இதுவரை எவரையும் ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மயந்த திசாநாயக்க பிரதமரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேசினார் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.