Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரின் விஜயதசமி வாழ்த்து

October 25, 2020
in News, Politics, World
0

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விஜயதசமியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மாபெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லக்ஷ்மி ஆகியோருக்கு நன்றியையும் வணக்கத்தையும் வேண்டுதலையும் தெரிவிக்கும் விரதமாக நவராத்திரி விரதம் அமைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றித் திருநாளாம் விஜயதசமித் திருநாளன்று தொடங்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் இறைவனை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி விஜயதசமித் திருநாளை மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கின்றமை அதன் சிறப்பு என்றும் பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீய சக்திகளைப் புறந்தள்ளி, நேர்மறைச் சிந்தனைகளோடும் உறுதி சிறிதும் குறையாத நெஞ்சோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் நன்னம்பிக்கையோடும் இத்தகைய சிறப்பு மிக்க விஜயதசமி புனித நாளில், அன்னையின் அருளால் இலங்கை மக்கள் மதநல்லிணக்கம், பன்முகத்தன்மை என்பவற்றை வளர்க்கவும் அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Previous Post

பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை

Next Post

நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Next Post

நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures