பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், அரச தலைவர் ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளது.
”மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பாக அவரிடம் சாட்சியம் பெறப்படும். விசாரணைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வு, இன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.