ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ் மாவட்டத்திற்கான உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியிடுவோர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் படி கோப்பாய் தொகுதி வலி மேற்கு பிரதேச சபை வலி தென் மேற்கு மற்றும் வல்வெட்டி பிரதேச இ நகர சபை பருத்திதுறை நகர சபை உள்ளிட்ட சபைகளில் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டு வருகின்றனர்.
அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் செயல்பாடுகளை முனனெடுக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்து யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் பலரை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
