ஓமன் நாட்டுக் கடற்கரையில் பாறைகளின் இடுக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய அரிய வகை ஆமையை கணவன், மனைவி போராடி மீட்டனர்.
ராஸ் அல் ஜின்ஸ் ((Ras Al Jinz)) கடற்கரையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லட் யங் என்பவரும், அவரது கணவர் ஜார்ஜ் கிரிஸ்லெட் என்பவரும் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அரியவகை கடலாமை ஒன்று பாறையைக் கடக்க முயன்று அதன் இடுக்கில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட சார்லட்டும், ஜார்ஜூம் அதனை விடுவிக்க முயன்றனர். ஆனால் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்டதால் ஆமையை விடுவிக்க முடியவில்லை. இறுதியில் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஆமையை இருவரும் விடுவித்தனர். உயிர் தப்பிய மகிழ்ச்சியில் ஆமையும் ஆடி அசைந்தவாறு கடலுக்குள் சென்றது