நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸோம்னோக்ஸ் (Somnox) என்ற நிறுவனத்தினர், நித்திரையின்மைக்குப் புதிய தீர்வாக கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.
உலகில் ஐந்தில் ஒரு நபருக்கு தூக்கமின்மை உள்ளது என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனை சரிசெய்வதற்காக பலரும் மருத்துவர்களை நாடி வருகின்றனர். ஆனால் இதற்கு புதிய தீர்வாக சிலீப் ரோபோ (sleep robot) என்ற தலையணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கருவியை அருகிலே வைத்து தூங்கும் பொழுது, இதயத் துடிப்பையோ அல்லது பாடல்களையே பயனர்கள் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் தூக்கத்தின் அளவும் கண்காணிக்க இதில் சென்சார்கள் (Sensors) பொருத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் உறங்கும் நிலையை அடைந்த பிறகு, இந்த கருவியானது இசைப்பதை நிறுத்திவிடும். இதற்கு முன்னரே சில நிறுவனங்கள் இதுபோன்ற தலையணைகளை வடிவமைத்துள்ளனர். இருப்பினும் இதில் புதிதாக, ப்பிறீதிங் றிதம் (breathing rhythm) என்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் மூச்சு விடும் தன்மையை சீராக்குவதற்கு உதவுகிறது.
இந்தக் கருவியை பயனர்கள் அவர்களின் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து தங்களுக்கு தேவையான பாடல்களை இரவில் ஒலிபரப்பு செய்யலாம். அதுமட்டுமின்றி இதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்குகளை அவர்களுக்கு பிடித்தமான நிறத்தில் ஒளிரவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க
