Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்!!

November 8, 2020
in News, Politics, World
0

இலங்கையின் பல மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்தார்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் மட்டக்குளி, மோதறை, புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, பார்பர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெள்ளம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின், ஹொரனை, இங்கிரிய மற்றும் மேற்கு கிராம சேவை அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, குருநாகலை மாவட்டத்தின் குருநாகலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் குலியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளைக் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஊரடங்கு உத்தரவு குறித்து இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்

Next Post

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானார்!!

Next Post

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures