கொழும்பில் பல பிரதேசங்களில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான சிறப்பு புலனாய்வு பிரிவு ஒன்றினால் நேற்றைய தினம், மோதரை – இப்பகே பிரசேத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு ஒன்றின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து தொலைக்காட்சி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மோதரை பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.