பல்வேறுப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவரான கஞ்சிபானை இம்றான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்றானினிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய அவர் இன்று அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றன.
இதன்போதே கஞ்சிபானையிடம் வாக்குமூலம் பெறுவதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பிறப்பித்தார்.
இதேவேளை கொலை செய்தமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் சூழ்ச்சி மேற்கொண்டமை உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக கஞ்சிபானை இம்றானுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, கஞ்சிபானை இம்றானை அடுத்த மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

