பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தொடர்பில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரான்சின் மொன்ட்பிலர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றமை தொடர்பில் எழுந்துள்ள முறைப்பாடுகள் குறித்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.