பரிசில் துப்பரவு தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், வீதிகளில் குப்பைகள் குவிகின்றது. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமங்களை சந்தித்துள்ளனர்.
CGT-FTDNEEA தொழிற்சங்க ஊழியர்களே இன்று திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 400 பணியாளர்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பரிசின் பல்வேறு வட்டாரங்களில் குப்பைகள் குவிந்துபோய் உள்ளன. குப்பைத் தொட்டிகளை சுற்றி குப்பைகள் அகற்றப்படாமல் நிறைந்திருப்பதை பலர் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். பரிசில் II, V, VI, VIII, IX, XII, XIV, XVI, XVII மற்றும் XX ஆகிய மொத்தம் பத்து வட்டாரங்கள் பாதிப்படைந்துள்ளன. தவிர, Ivry-sur-Seine (Val-de-Marne) மற்றும் Romainville (Seine-Saint-Denis) ஆகிய இடங்களில் உள்ள குப்பைகள் மீள் சுழற்சி மையங்களும் இந்த பணி நிறுத்தத்தால் தடைப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமாக தீர்க்கப்பட்டு, இயல்புக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.