Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழி – கஜேந்திரகுமார்

June 23, 2021
in Sri Lanka News
0
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழி – கஜேந்திரகுமார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து உங்கள் அரசியல் லாபங்களுக்காக இந்த விடயத்தைப் பாவிக்காதீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (22.06) நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை வரவேற்கும் அதே நேரம், செயல்பாட்டில் ஏதும் இல்லாதவாறு வெறுமனே தத்தமது கருத்துகளை அரச தரப்பினர் எழுந்தமானமாக கூறிவிட்டு முடிப்பதை, குறிப்பாக ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்த காலப்பகுதியில், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் இப்படியாக ஏமாற்றுத்தனமான கூற்றுகளை வெறுமனே கூறுவதை தவிர்க்கவேண்டும்.

அரசியல் கைதிகள் விடயத்தில் தத்தமது விருப்பங்களுக்கிணங்க வெறுமனே கருத்துச்சொல்லிவிட்டு அமருகின்ற ஒரு விடயம் அல்ல. இங்கு உண்மையில் அடிப்படை பிரச்சினையாக இருப்பது பயங்கரவாத தடைசட்டமே. அந்த பயங்கரவாத தடைச்சட்டமே எதுவித நீதியான முறைமைகளும் இன்றி தடுத்து வைக்கின்றமை உட்பட பல அநீதியான முடிவுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அதனடிப்படையிலேயே அரசியல் கைதிகள் நீதியற்ற விதமாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனை முழுமையாக நீக்காமல் அல்லது அதையொத்த இன்னொரு சட்டத்தை கொண்டுவராமல் இருப்பதை உறுதி செய்யாமல் இருந்தால் இப்படியான நெறிதவறிய முடிவுகளும் அநீதிகளும் கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே வெறுமனே பேச்சளவில் மட்டும் அரசியல் கைதிகளின் விடுதலை என கூறிக்கொண்டு காலத்தை கடத்துவதில் பயனில்லை.

இதே ராஜபக்ச அரசின் முந்திய ஆட்சிக் காலத்திலும் ஜி எஸ் பி வரிச்சலுகைக்கால ஐசிசிபிஆர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நடைமுறையில் அதற்கு எதிர்மாறாக, தமக்கு மாறான கருத்துடையவ்ர்களை ஒடுக்கவே அதை பாவித்திருந்தது.

இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இந்த நாடாளுமன்றிலும் இதற்கு முந்திய நாடாளுமன்றிலும் தமிழ்த்தரப்பினர் குரல்கொடுத்த போது அதை இங்கு இருப்பவர்கள் பலமாக எதிர்த்திருந்தனர். அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுப்பவர்களை ‘புலிகள் ‘ என அழைத்தனர். இன்று தமிழர் தரப்பு, அரசியல் கைதிகள் தொடர்பில் கூறியவற்றையே ஜி எஸ் பி பிளஸ் கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த காலப்பகுதியில் நாமல் ராஜபக்ச கூற முற்படுகிறார்.

உண்மையில் அரசியல் கைதிகள் தொடர்பில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினையான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுதலும் அதனை ஒத்த இன்னொரு அநீதியான சட்ட மூலத்தை கொண்டுவராமல் இருப்பதும்தான், அவர்களின் விடுதலைக்கான ஒரே வழி என்பதை அரசாங்கத்துக்கு இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

Previous Post

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை

Next Post

மக்களின் கழுத்தை நெரிக்கின்றது அரசு – சஜித்

Next Post
மக்களின் கழுத்தை நெரிக்கின்றது அரசு  – சஜித்

மக்களின் கழுத்தை நெரிக்கின்றது அரசு – சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures