பந்து தலையில் தாக்கியதில் மயங்கி விழுந்த ஓஜா! மைதானத்தில் பதற்றம்
இந்தியாவின் உள்ளூர் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் துலிப் டிராபி தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா புளூ- இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா கீரின் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா களத்தடுப்பில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது பந்து அவரது தலையில் தாக்கியது.
வேகத்துடன் வந்து பந்து தலையில் தாக்கியதில் அவர் மைதானத்திலே மயக்கமடைந்தார். இதனால் வீரர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரக்யான் ஓஜா தற்போது நலமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.