Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பட்­ட­தா­ரி­கள் ஆள்­சேர்ப்பு வய­தெல்லையை நீடிக்­க நடவடிக்கை!

August 24, 2017
in News
0
பட்­ட­தா­ரி­கள் ஆள்­சேர்ப்பு வய­தெல்லையை நீடிக்­க நடவடிக்கை!

‘‘20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை அரசு வழங்­க­வுள்ள நிலை­யில் அதன் வய­தெல் லையை 35 வய­தில் இருந்து 45 வய­தாக அதி­க­ரிக்க வேண்­டும் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன் வைத்த கோரிக்­கையை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏற்­றுக்­கொண்­டார்’’ இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை வழங்­க­வுள்ள நிலை­யில் அதன் வய­தெல்­லையை 35 வய­தில் இருந்து 45 வய­தாக அதி­க­ரிக்க வேண் டும் உள்­ளிட்ட தற்­போ­தைய 5 அவ­சர விட­யங்­கள் தொடர்­பில் இன்று ( நேற்று ) தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து வலி­யு­றுத்­தி னோம்.

நாடு முழு­வ­தும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்­க­வுள்ள நிலை­யில் அவர்­க­ளுக்­கான வய­தெல்­லையை 35 வயது என்­ப­தனை வடக்கு – கிழக்­கில் 45 வய­தாக அதி­க­ரிக்க வேண்­டும். அதே­போன்று அந்த எண்­ணிக்­கை­யில் போரால் பாதித்த எமது மாகா­ணங்­க­ளுக்கு அதி­க­மாக வழங்­கப்­பட வேண்­டும்.

முன்­னாள் போரா­ளி­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் வேலை வாய்ப்பு இன்றி பெரி­தும் சிரம்ப்­ப­டு­வ­த­னால் அவர்­க­ளின் தக­மைக்­கேற்ப வேலை வாய்ப்பை வழங்க வேண்­டும்.

வடக்கு – கிழக்­கில் இடம்­பெற்ற போர் கார­ண­மாக 80 ஆயி­ரம் பெண்­கள் குடும்­பத் தலை­வர்­க­ளாக வாழ்­கின்­ற­னர். இதில் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் வாழ்­வா­தார நெருக்­க­டி­யில் உள்­ள­னர். அவர்­க­ளுக்­காக உட­னடி வேலை வாய்ப்­புக்கு வடக்­கில் இரு தொழிற்­சா­லை­கள் அமைக்­கப்­பட வேண்­டும்.

யாழ்ப்­பா­ணம் பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக தரம் உயர்த்தி பலா­லிக்­கும் சென்­னைக்­கும் இடையே வானூர்தி சேவை ஆரம்­பிக்­கப்­பட வேண்­டும்.

அந்­தப் பணிக்­காக இந்­திய அதி­கா­ரி­கள் குழு­வி­னர் மேற்­கொண்ட ஆய்­வில் மேல­திக காணி சுவீ­க­ரிக்­கா­ம­லேயே பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக தரம் உயர்த்த முடி­யும் என அறிக்­கை­யிட்­டி­ருந்­தார். எனவே மேல­தி­க­மா­கக் காணி­க­ளைச் சுவீ­க­ரிக்­காது பிராந்­திய வானூர்தி நிலை­யம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும்.

காங்­கே­சன்­துறை சீமேந்து ஆலை­யில் உற்­பத்­தியை மேற்­கொள்­ளாது அதில் பொதி செய்­தல் போன்ற பணி­களை மேற்­கொள்­ளு­தல் அல்­லது வேறு பணிக்­காக தொழிற்­சா­லையை இயக்க வேண்­டும். ஆகிய 5 முக்­கிய கோரிக்­கை­களை முன்­வைத்­தோம்.

அவற்­றுக்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளிக்­கை­யில்,

பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்­கான வய­தெல்­லையை 35 வய­தில் இருந்து 45 வய­தாக அதி­க­ரிக்­கு­மாறு உட­ன­டி­யாக பொது நிர்­வாக உள்­நாட்­டு­அ­லு­வல்­கள் அமைச்­சுக்கு உத்­த­ர­வி­டப்­ப­டும்.

பலாலி வானூர்தி நிலை­யத்­துக்­கான அபி­வி­ருத்­திக்­கு­ரிய நட­வ­டிக்கை விரைவு படுத்­தப்­ப­டும். அதே­போல் வடக்­கில் இரு ஆடைத் தொழிற்­சா­லை­களை அமைக்க ஏற்­பாடு செய்­யப்­ப­டும். அந்­தத் தொழிற்­சா­லை­க­ளில் பெண்­க­ளைத் தல­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்­கள் உள்­வாக்­கப்­ப­டும்.

அதே­நே­ரம் முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும் ஓர் பொருத்­த­மான பொறி­மு­றையை விரை­வில் ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் – என்­றார்.

இந்­தச் சந்­திப்­பில் என்­னு­டன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ம.ஆ.சுமந்­தி­ர­னும் பங்­கு­கொண்­டி­ருந்­தார் என்று ­நா­டா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா மேலும் தெரி­வித்­தார்.

Previous Post

ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு

Next Post

’இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’: வலியுறுத்தும் அமெரிக்கா!

Next Post
’இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’: வலியுறுத்தும் அமெரிக்கா!

’இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’: வலியுறுத்தும் அமெரிக்கா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures