ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நோயர் கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, தாக்குதல் நடாத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.